அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சிலத் தமிழிசை நூல்கள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சில இசை நூல்கள்  இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி. இடைச்சங்கத்து அநரகுலனென்னும் தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்புசெல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக்கண்டு தேரிற்கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச்செய்த இசை நுணுக்கமும், பராசைவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும், கடைச் சங்கமீரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களில் வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலுமெனவைந்தும இந்நாடகக் காப்பியக்கருத்தறிந்து நூல்களன்றேனும்…

தமிழ்ச்சங்கங்களில் இசைஆராய்ச்சியும் நடைபெற்றது.

  வடிம்பலம்ப நின்றானும் அன்றொருகால் ஏழிசை நூற்சங்கம் இருந்தானும் கிழக்கத்திய இசை (Oriental Music) சீரிலும் சிறப்பிலும் மிக உயர்ந்தது என்றும் மிகவும் திருத்தம் பெற்றது என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கத்திய இசை என்பதில் தமிழிசை உட்படுகிறது என்பதை அறிய வேண்டும். இது ஐந்திசை, ஆறிசை, ஏழிசை என்ற முறையில் முன்னேறித் திருத்தமடைந்துள்ளதாக, அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. (The Encyclopaedia Americans, Vol.19. page. 627) – முனைவர் ஏ.என். பெருமாள்: தமிழர் இசை: பக்கம்.14