தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032) தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம் தமிழே விழி ! தமிழா விழி ! இணைய உரையரங்கம்: மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் தாமரை முனைவர் இராச.கலைவாணி உரைச்சுடர் செல்வி ந.காருண்யா…
தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033) தமிழர் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம் தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரை: பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர், …
சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019
தை 26, 2050 2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 / 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…
தனித்தமிழ்த் திருநாள் – அண்ணா
தனித்தமிழ்த் திருநாள் பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூசாரி விழாக்களிலே ஒன்றல்ல! தனித்தமிழ்த் திருநாள்! கருத்தளிக்கும் பெருநாள்! தமிழன், உழைப்போரை உயர்த்திடும் பண்பையும் உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு, இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வந்தது பொங்கற் புதுநாள்! அறுவடை விழா! விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவல்ல! உழைத்தோம், பலன் கண்டோம்; கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம் என்ற…
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! – அண்ணா
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளல் வேண்டும். அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண…
தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்
தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப்…
வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்
தை 02, 2047 / சனவரி 16, 2016 உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி…
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் 58
தை 6, 2046 / சனவரி 20, 2015
தமிழர்திருநாளா? மகர சங்கராந்தியா? திராவிடர் திருநாளா?
உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி, மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல் …