தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 6/17 ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்றுசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானைசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானைநாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை (26) தமிழர் நாகரிகம் நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானைநாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானைநயமான நற்குணமே நாகரிகம் அம்மானை (27) விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்அருந்தமிழ்…
தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. – தாகூர்
தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. ஆரியரல்லாதார் இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்பைப் பயன்மதிப்பு அற்றதென யாரும் கருத வேண்டா. உண்மையைச் சொல்லுவதெனில், பழந்தமிழ்ப் பண்பாடு எவ்வகையிலும் மதிப்புக் குறைந்ததன்று. திராவிடப் பண்பாட்டோடு ஆரியப் பண்பாடு ஒன்று சேர்ந்ததால் தோன்றியதே இந்திய நாகரிகம். திராவிடப் பண்பாட்டின் தாக்கத்தால், இந்திய நாகரிகம் செழுமையும் சிறப்புமுற்றது; அகலமும் ஆழமும் அடைந்தது. … … … அவர்கள் மெய்யுணர்வுடன் கலையுணர்வு மிக்க கலைஞர்கள்; ஆடலிலும் பாடலிலும் அவர்கள் தன்னிகரற்றவர்கள். கவின்மிகு கலைவடிவங்களைத் திட்டமிட்டு…
இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்! – பாவாணர்
வேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது! வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 – 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க…
இந்திய நாகரிகம் என மொழிவன எல்லாம் தமிழர் நாகரிகங்களையே! – தனிநாயக அடிகள்
இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்கினால் மாக்சுமுல்லர், வின்றர்னிட்சு போன்றவர்கள் வட மொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். தமிழ் இலக்கியத்தைப் பற்றி, ஒரு சொல்லேனும் ஒரு குறிப்பேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம் என அவர்கள் மொழிவன எல்லாம் திராவிட நாகரிகம், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாக் கொண்டவையாயினும், பல்லாண்டுகளாக நடுவு நிலைமை கடந்தோர் பலர் இவ்வுண்மையை மறைத்தும் திரித்தும் ஒளித்தும் நூல்கள் யாத்துள்ளனர். இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதற்குப் பெரிதும் மனத் துணிவு வேண்டியுள்ளது. ஆதலால் உலகம்…
தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்
தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…
ஆரியக்காலத்திற்கும் முந்தைய உயர்தமிழ் நாகரிகம் – அறிஞர் மக்கே