thaninayaga_adigal01

  இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்கினால் மாக்சுமுல்லர், வின்றர்னிட்சு போன்றவர்கள் வட மொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். தமிழ் இலக்கியத்தைப் பற்றி, ஒரு சொல்லேனும் ஒரு குறிப்பேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம் என அவர்கள் மொழிவன எல்லாம் திராவிட நாகரிகம், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாக் கொண்டவையாயினும், பல்லாண்டுகளாக நடுவு நிலைமை கடந்தோர் பலர் இவ்வுண்மையை மறைத்தும் திரித்தும் ஒளித்தும் நூல்கள் யாத்துள்ளனர். இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதற்குப் பெரிதும் மனத் துணிவு வேண்டியுள்ளது. ஆதலால் உலகம் நம்மை உணராமல், பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு உயிர் வாழ்ந்து வந்துள்ளோம்.

தனிநாயக அடிகளார்