தமிழினியின் இரு நூல்கள் வெளியீடு, கிளிநொச்சி

தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் கூட்டுறவாளர் கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. வெளியீட்டு உரையை மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்துகின்றார். ‘தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும்’ எனும் தலைப்பில் முன்னாள் போராளி தங்கராசா சுதாகரன் உரையாற்றுகின்றார். முன்னாள் போராளி யாழ்நிதி, ‘ஒரு…

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு

2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது… தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது… தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது…   இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.   வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும்…

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு

1/2     ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர்.  அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…

செந்நெருப்புக்காரியே! – தமிழினி தமிழினி

செந்நெருப்புக்காரியே! பெருமை கொள்கிறேன்! முகத்தில் மஞ்சள் எங்கே? காலில் கொலுசெங்கே? காதில் தோடு எங்கே? நெற்றியில் பொட்டெங்கே? அழகிய புன்னகை எங்கே? கோதி முடித்த கூந்தல் எங்கே? கண்ட கனவெங்கே? பஞ்சணையில் உருண்டு படுத்த தூக்கம் எங்கே? பூப்பொன்ற கை, மரம் போன்று காய்த்ததேன்? பூக்கொய்த கையில் ஆயுதம் தரித்ததேன்? ஊரில் உன்னை அழகி என்பர் உன் வயிறும் ஒட்டிப்போனதேன்? பருவத்தில் உன் பின் ஒரு கூட்டம் உன் பருவம் சொன்னது என்ன? எனக்கென ஓர் உலகம் என்றோ! நீண்ட குதி செருப்பணிந்து பஞ்சாபிச்…

தமிழினியின் கவிதை

  சித்திரை 11, 2003 – ஆனி 01, 2046 : 23.04.1972 – 18.10.2015 போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கி தீர்த்திருந்த இரவின் கர்சனை பயங்கரமாயிருந்தது அம்பகாம பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தின் வனப்பை கடைவாயில் செருகிய வெற்றிலைக் குதப்பலாக சப்பிக்கொண்டிருந்தது யுத்தம். மீளாப் பயணம் சென்ற தோழி விடைபெற கை பற்றி திணித்துச் சென்ற கடதாசி…