அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, 09.05.2021

தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 5 அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!,  சித்திரை 26, 2052 / ஞாயிறு / 09.05.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி அ. துரையரசி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்:  முனைவர் பா.தேவகி  முனைவர் வா.நேரு நிறைவுரை:  தோழர் தியாகு நன்றியுரை : செல்வி இர.திவ்வியா அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்

உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!   தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,  இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018)  காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால்  பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர்  நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார்.  ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும்  வகையில் மரணமுற்றார்….

ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 –  ஆடி 22,  2049 / ஆகத்து 07, 2018)   தி.மு.க.வரலாற்றின்  பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும்  ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும்   ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.  துயரத்தில் பங்கேற்கும் அகரமுதல மின்னிதழ் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகம்  இலக்குவனார்…