தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இளங்குமரன்

  “தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார். . . . .                                …

கணித்தமிழ் எழுத்தரங்கம்

பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம் 1. கணித்தமிழ் எழுத்தரங்கம் பதின்மூவருக்குப் பரிசுகள் பங்கேற்பாளர்களுக்குக் கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள்   தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும்…

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம். கைத்தறி – துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு ‘செய த்ரியம்பிகா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை நெய்வதிலும் பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு…

தமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்!

    தமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே! ஆனால், திரைத்துரையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப்படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.   அடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும், மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான் எனத்…

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 2 : முனைவர் இராம.கி

  இக்கருத்தரங்கில் தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப்பெயர்களை ஒரேவகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக்கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர், தி.இரா.நி.பல்கலைக்கழகம் பேரா.வி.செயதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சீராய்வுத் திட்டம் பேரா.முருகையன், பேராசிரியர்(ஓய்வு), அண்ணாமலைப்பல்கலைக்கழகம் முனைவர் மா.பூங்குன்றன்,  பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன், பதிப்பாசிரியர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

 தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும்  பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து  தமிழ் எழுத்தொலிகளுக்கான  ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது.   சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன்,  முனவைர்…