எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666)

உலகத் தமிழ் நாள்

கட்டுரைப் போட்டி

30 பரிசுகள்

தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.

விவரம் வருமாறு:

தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்!

தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி என எல்லா நிலைகளிலும் திகழவும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் தமிழ் பரவவும் தமிழக அரசும் இந்தியஅரசும் தமிழாசிரியர்களும் தமிழ் அமைப்புகளும் மக்களும் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கட்டுரை விளக்கப்பட வேண்டும்.

பரிசு விவரம்:

மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் வழங்கும் உரூ. 500/- வீதம் 10 முதல் பரிசுகள்

கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள்   குடும்பத்தினர் வழங்கும் உரூ. 250/- வீதம் 20 இரண்டாம் பரிசுகள்

போட்டியாளர்கள் தத்தம்  பெயர், படிப்பு, கல்லூரி அல்லது பணி, பணியிடம், வீட்டு முகவரி விவரங்களுடன் மின்வரி குறிததும் தொலைபேசி, அலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும். விழா இடம் முடிவானதும் தெரிவிக்கப்படும்.

பக்க அளவு:   முழுத்தாள் அளவில் குறைந்தது 4 பக்கங்களும் 6 பக்கங்கள் மிகாமலும் கட்டுரை இருக்க வேண்டும்.

சீருரு(யுனிகோடு) எழுத்துருவில் கணியச்சிட்டுப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப் பெற வேண்டும்.

கட்டுரை வரவேண்டிய இறுதி நாள்: ஐப்பசி 19, 2050  /11.11.2019

அனுப்ப வேண்டிய மின்வரிகள்: thamizh.kazhakam@gmail.com ;

தொடர்பிற்கு:  

எ.த. இளங்கோ, தலைவர், வடசென்னைத் தமிழ்ச்சங்கம்; 73959 20276 ; vadachennaitamilsangam@gmail.com

முனைவர் பா.தேவகி 97100 07577 ; devaki0574@gmail.com

இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்