அவர்கள் வருகிறார்கள்! – தமிழ்சிவா

அவர்கள் வருகிறார்கள்!    வினையை விதைத்துத் திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள் முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள் மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள் நெய்தலைக் கூவமாக்கினார்கள் பாலையைப் பாழாக்கினார்கள்   நாளெல்லாம் பொழுதெல்லாம் வினைகளை விதைத்துத் திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   கானுறு வேங்கையைக் ‘காசு’ க்குப் பிடித்தார்கள் கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள் வெண்குருதியைக் குடத்தினில் வாங்க நம்குருதியையே சிந்த வைத்தார்கள்   ஊன்துவை அடிசில் உண்டு தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி தெளியாச் சிந்தனை கொண்டு திரண்டு வருகிறது கூட்டம்…

கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா

கசங்கிய காகிதங்களின் கருணைமனு   நகர நரகத்தில் கைவிடப்பட்ட கட்டடங்களாய், தூய்மையையே காணாத கழிவறைகளாய், தூய்மை இந்தியாவில் நாங்கள்!   நகரத் திராணியற்ற நத்தையின் முதுகில் நான்காயிரம் பலமேற்றியதில் கல்வி வண்டி கவிழ்ந்தது எங்கள்மேல்தான்!   அந்த இண்டு இடுக்கில் எட்டிப்பார்த்தவேளையில் காலைத் திணிக்க இரண்டுறைகள் நூல்களைத் திணிக்கப் பையுறை உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள் எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள் கழுத்துக்குக் கோவணம் மாட்டி மூளையை அம்மணமாக்கினீர்கள்!   எங்கள் நாக்கைக் கசக்கியதில் நாண்டுகொண்டது எங்கள் மொழி!   பள்ளிக்கழிவறையில் பதைத்துச் செத்தது…

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை – தமிழ்சிவா

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை    அறிவின் சுடுகாட்டிற்கென அமைந்த வழிகள் ஏராளம் ஏராளம் எழுதுங்கள் எழுதுங்கள் எல்லாத் தேர்வுகளையும்   பாடத்திட்டப் படுகுழிகள் எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கின்றன   மதிப்பெண்களால் சிதைக்கப்பட்ட மனித மூளைகள் வரலாற்றுப் பெட்டிகளில் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன   பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கையுடன் அறுப்பதற்காகவே ஆடுகளும் கோழிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன   நித்திரை மன்றங்களின் சுத்தியல்பட்டு சிந்திய இரத்தவாந்திகள் அவ்வப்போது உடனுக்குடனே ‘சுடச்சுட’ அலசப்படுகின்றன   பற்பலவற்றை ஆவணப்படுத்தாமலிருப்பது அருமை மீயருமை   வருணவழிப் ‘பட்ட’ கல்வியில் கல் மண் முள் கழிவுகள்   காளைகளின்…

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா   வா சாதித் தேரிழித்து நடுத்தெருவில் நிறுத்து இல்லாதோர் இயலாதோர் வீடு வாசல் கொளுத்து ! எடு கசடுகளே தலைவனெனப் புகழ்ந்து விழா எடு ! விடு மானம் பழம் அறிவு புகழ் பீடோடு பிறவும் விடு! செய் பாழும் சிலைக்குப் பாலூற்றிப் பரவல் செய்! வாழும் தொண்டர்க்கு வரிசையுடன் பாடைசெய்! பெருமக்கள் காட்டிய நல்வழியைப் பெருவிருப்புடனே  நிரவல் செய்! தடு தமிழினத்தில் யாரேனும் தகுதியால் உயர்ந்தாலும் உள்ளுக்குள் நல்லறிவு தன்மானம் புகுந்தாலும் ஓடோடித்தடு! நடு பொதுத்தெருவில்…

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம்   பெரியாரே!  பெரியாரே! நீங்களோ ஓயாமல் படித்தீர்கள் ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ ஓயாமல் நடிக்கிறார்கள். இது எந்தச் சித்தாந்தில் வரும்? முன்னணி  என்று பெயர் வைத்தவனெல்லாம் மானுட  இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான் இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள் ஏலம் விடப்பட்ட நீதிதேவதை பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்த்து ஈட்டிய வருமானத்தில் வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில் வயதாகிப்போனதால் முதியோர் உதவித்தொகை கேட்டும் கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில் சிலபல  ஆண்டுக்கு…

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! – தமிழ்சிவா

தேறாத மனத்துக்கு ஆறுதலேது! நிலத் தட்டுகள் இடம்பெயர்ந்து நிலை தடுமாறியது பெயராநிலம் ! எல்லைகள் கடந்து பிள்ளைகளுக்குப் பிணமென்று பேர்வைக்க பீறிட்டுக் கிளம்பியது கடல்! பெருகிய ஓலங்கள் பேரலைகளின் பேய்த்தனமான பேச்சொலியில் நீரணைந்த நெருப்பாயின ! தணியாத தாகத்தில் நீர் குடித்த உடலங்கள் சடலங்கள் என்னும் சட்டை போட்டுக்கொண்டன! கண்ணீர்ச் சுவையில் உவர்ப்பு ஒழிந்து கைப்பு கூடியது.. தொலைந்த  இறகுகள்தேடி அலைந்துகொண்டே இருக்கிறது கலுழ்ந்து கலுழ்ந்து கண்கள் பூத்த காலம்! நச்சு மரங்களை வீழ்த்தியிருக்க வேண்டிய நான் பிள்ளை வரங்களைப் பெயர்த்தேனே என வயிறளைக்கும்…

ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? – தமிழ்சிவா

ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? கல்வித்துறையைச் சீரழித்தது. மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது.       3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச் சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும் அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது. இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும்.    5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய குற்றங்களுக்காகத் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்தவித மன்னிப்பும் வழங்கக் கூடாது . மீண்டும் அவர்களிடத்தில் ஆட்சியை வழங்குவதென்பது நமக்கு நாமே விரைவில் உயிர் பறிக்கும் நஞ்சு…

கட்டாயம் காலி – தமிழ்சிவா

கட்டாயம் காலி   “காதலில் தோற்றுப் போன உழவோர் சாதலைத் தேர்ந்து சட்டென மாய்ந்தார்” திருவாய் மலர்ந்தருளி தித்திக்கும் தனது கண்டு பிடிப்பை எத்திக்கும் புகழ்மணக்க எடுத்துக் கூறிய எழில்மிகு ஆட்சியில் கல்வி கடைச்சரக்கு உண்மை உண்மை காவிக்கு முதலிடம் முற்றும் உண்மை சிறுமையே பெருமையும் சிறப்பு மாகும் நிலத்தைக் கையகப் படுத்தி நாட்டின் வளத்தைக் கயவர் கையில் கொடுத்து நெஞ்சம் நிறைவு கொள்ளவே நாளும் வித்தைகள் காட்டும் வித்தகர் வாழ்க! உள்ளே குப்பையும் வெளியே தூய்மையும் கொண்ட “கோ”மகன் வாழி! வாழி! கண்டெடுத்த…

இப்படியும் உண்டோ? -தமிழ்சிவா

இப்படியும் உண்டோ?   எங்கள் ஊரில் கடற்கரைக் குதிரைக்கு இலையாய் இறக்கை முளைக்கும், நட்பே! உங்கள் ஊரில் அப்படி உண்டா? எங்கள் நாட்டில் பேய்மழை பெய்தால் ஏரியைத் திறந்து விட்டுக் கொள்(ல்)வோம் உங்கள் நாட்டில் இப்படி உதவலுண்டா? வண்டி வண்டியாய்த் த(வ)ந்த பொருளின்மேல் வருத்தமே படாமல் படத்தை ஒட்டுவோம் பச்சைக் குழந்தைக்கும் பச்சை குத்துவோம் தேரின் சக்கரத்தில் விழுந்த கன்றாய் ‘காரின்’ சக்கரத்திலும் விழுவோம் நன்றாய் இருக்கும் திசைநோக்கி இங்கிருந்தே வணங்குவோம் சிரிக்கும் குழந்தையாய் எரிக்கும் வெயிலை ஏற்று செத்துப் போவதையும் சிரமேற் கொள்வோம்!…

நல்லதை நாட்டுவதே நம்பணி! – தமிழ்சிவா

நல்லதை நாட்டுவதே நம்பணி! மஞ்சள் நிறத்தொரு பூனை        மக்களை ஏமாற்றும் பாரீர் கொஞ்சல் மொழிகள் பேசி        நெஞ்சம் பிளக்கும் பாரீர்!! சந்தியில் தமிழன் சாகும்போதும்        சத்தியம் வெல்லுமெனும் பாரீர்! முந்தியது என்றாலும் அதன் முகத்தையே மாற்ற வேண்டும்! பச்சை நிறத்தொரு பூனை        பாரில் வளருது பாரீர்! இச்சை கொண்டது அப்பூனை        ஈடிலாப் பதவி மேலே! நச்சைக் கொணர்ந்து ஊட்டும்        நல்ல திறமை அதற்குண்டு! எச்சில் என்றே நினைக்கும்        யாரையும், எடுத்தெறிய வேண்டும்! மாம்பழம் தின்றிடும்…

தெளிந்தவர் வாக்கு

தெளிந்தவர் வாக்கு கொடுக்கப்பட்ட புகார்களை வரிசையாய் எண்களிட்டு வாகாய் அடுக்கிவைக்கும் காட்சிக் கூடமொன்று கண்டுகளிக்க உள்ளதெனக் கண்டவர்கள் சொன்னார்கள்! கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக் கழிபேருவகை எய்தியோர் களிநடம் புரிய அரங்குகள் அமைத்துத்தரும் ஆணையம் உண்டென்று அறிந்தவர்கள் சொன்னார்கள்! சீர்திருத்தம் எனச்சொல்லி ஓர்திருத்தமும் செய்யாத நாடறிந்த நல்லோரவை நம்நாட்டில் உண்டென்று நன்கறிந்தோர் சொன்னார்கள்! தப்படியும் சேப்படியும் ஒப்பில்லாமல் செய்தவர்கள் எப்படியும் வெற்றிபெற்றுக் கறைவாழ்வு வாழ்ந்திடவே கலங்கரை விளக்கமாய்க் கலங்காது பணியாற்றும் மெத்தபடித்த மேதையோரவை இத்தமிழ் நாட்டிலும் உண்டெனும் உண்மையைத் தெளிந்தவர்கள் சொன்னார்கள் தேர்தல் ஆணையமென்று! தமிழ் சிவா

தாய்க்கோழியின் வருத்தம் – தமிழ்சிவா

தாய்க்கோழியின் வருத்தம்   காடடைப்பான்1 தூக்கிச் செல்லுமோ என்றஞ்சிய தாய்க்கோழி, வேலியில் ஊர்ந்த பாம்பு கௌவிய குஞ்சை மீட்கக் கொக்கரிக்கும். என்நெஞ்சைப் படம்பிடித்து, நெடுமென வளர்ந்த கருமுள் முருக்கம் சிவப்பாய்ப் பூக்கும். அந்தி மந்தாரை அனைத்தும் கலங்கடிக்கும். பந்தல்கால் சுற்றிய பசுநிறக் கொடியில் பவழ மயிர்மாணிக்கம் பார்க்கும். கையெழுத்து  மறையும் வேளையில், அங்கே சேச மலையில் சிவப்பு மரத்தைச் சிரத்தையுடன் சீவிக் கொண்டிருப்பாய், இங்கே பால்சுவை பருகிய பூனைகள் சிவப்பாய் மொடமொடக்கும் காகிதக் கட்டுடன், அங்கே சுட்டு வதக்கிய உடல்களும் கூர்ங்கத்தி பட்டுச் செதுக்கிய…