பல்துறை நோக்கில் முத்தொள்ளாயிரம் – கருத்தரங்கம்
மாசி 14, 2047 / பிப்.26, 2016 காலை 10.00 தாகூர்கலைக்கல்லூரி புதுச்சேரி
தமிழிலக்கியத்தில் நீதி – கருத்தரங்கம், மதுரை
தை 15, 2047 / சனவரி 29, 2016
தமிழிலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் நெறிமுறைகளும் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு காவியா பதிப்பகம் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அறிக.
ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!
ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்! உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும்…
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…
சென்னையில் வாசு.அரங்கநாதன் ஆற்றிய திருமந்திர உரை
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் உத்தமம் என்னும் தகவல்தொழில்நுட்ப மன்றத்தின் தலைவராக உள்ளார். இதன் சார்பில் புதுச்சேரியில் வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வந்த இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருமந்திரத்தின் மொழிநடைகுறித்துச் சிறப்புரை ஆற்றினார். சிக்கலான தலைப்பைச்சிறப்பான முறையில் பேராசிரியர் வாசு.அரங்கநாதன் விளக்கியதாக வந்திருந்தோர் பாராட்டினர். செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்
புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் 200 ஆம் ஆண்டுத் தொடக்க விழா
தமிழகத்தில் தமிழில் மிக மிக மிகுதியான பாடல்களை இயற்றிவர் எனும் பெருமை உடையவர் சிலரில் ஒருவர், உ வே சா அவர்களின் குருவாக விளங்கியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பல தல புராணங்கள் பற்பல பிரபந்த வகைகள் ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் சீட்டுக்கவிகள் என பன்னூராயிரம் பாடல்களை இயற்றியவர் எனலாம் அவர்தம் 200 ஆம் ஆண்டு தொடக்க விழா.சென்னை பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது. சென்னை கடற்கரை ஓரம் அமைந்த தமிழ்த்துறை சார்ந்த அரங்கில் வைகாசி…
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை மெரினா வளாகம், சென்னை – 600 005. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம். வரவேற்புரை: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை. தலைமை : பேராசிரியர் இரா. தாண்டவன் அவர்கள் மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம். சிறப்புரை : திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர்…