மொழிப்போர் 50 மாநாடு, மதுரை

தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/       மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்!   வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில்  தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்!   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்

ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம்  திருச்சிராப்பள்ளி

“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!

   இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு,   சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.   உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.  படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர்.  உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக்…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙு

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)   தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே!   இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ

 (ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்!   1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது. அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும்,…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி

(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது.   கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா

(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”   சிறப்புப் பொதுக்குழு தீர்மானங்கள் (தொடர்ச்சி) -ஙா 2.1. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதிப்பதற்கு அல்லது மறுப்பதற்கு அந்தந்தமாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்திற்குஉள்நாட்டு அனுமதி உரிமம் (Inner line permit) என்று பெயர். அதே அதிகாரத்தை, தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும். 2.2. தமிழ் பேசும்…

“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”

  திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில்   ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!      தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், ஆகத்து 15, 16 நாட்களில் திருச்சி, இரவி சிற்றரங்கில் நிறுவப்பட்ட பாவலர்மு.வ.பரணர் அரங்கில் நடைபெற்றது. ஆகத்து 15 – வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சிறப்புப் பொதுக்குழுவை, தலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, சென்னை,தாம்பரம் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவழிநடத்தியது. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர்கி.வெங்கட்ராமன்…