உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார். உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில்…

உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

கார்த்திகை 1, 2050  / நவம்பர் 17,  2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7 காலை 9.15 மணி: மூலிகைப் பானம் நண்பகல் 1.15  மணி : உணவு உலகத் தமிழ் நாள் சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா தமிழ்த்தாய் வாழ்த்து:  இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள் வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம் கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! நெறியாளர் : கவிஞர்…

உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…