தமிழ்ப் பெரியார் திரு. வி. க. 6. – வ.உ.சிதம்பரனார்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி) தமிழ்க்கலை 6. வ. உ. சிதம்பரனார் [9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.) நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. சிலர் நினைக்கிறார்கள்,…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம் – தொடர்ச்சி) 5. உயிர்த்தொண்டு (சென்னை தொண்டைமண்டலம் துளுவவேளாளர் பாட சாலையில் ஆற்றிய சொற்பொழிவு) மாணவ மணிகளே, நீங்கள் வாழ்கின்ற காலம் இந்தக்காலமா? அந்தக்காலமா? எந்தக்காலம்? நீங்கள் வாழ்கின்ற காலம் நெருக்கடியான காலம். உடை கிடைப்பது, சோறு கிடைப்பது அரிதாயிருக்கிற காலம். சில மாணாக்கர்கள் பரிட்சை இல்லாத காலம் வருமா? என்றுகூட எண்ணலாம் பரிட்சை ஒழிந்தால் ஒரு பெரிய சனியன் ஒழிந்தது என்று எண்ணும் மாணாக்கரும் இருக்கலாம். மாணவ மணிகளின் உடல்…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. ஆ. இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர். – தொடர்ச்சி) (சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை) சகோதரிகளே! சகோதரர்களே!! யான் “வள்ளலார் திருவுள்ளம்” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழ்க்கை? தற்கால உலகவாழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அரிசிப் பஞ்சம் தற்சமயம் தாண்டவமாடுகிறது. ஒரு பணக்காரர் தன் வீட்டில் ஆயிரம் அரிசி மூட்டைகளைப் பதுக்கி…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. ஆ. இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர்.
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும் – தொடர்ச்சி) இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை, தொடர்ச்சி, திருவொற்றியூர்] இந்தக் குண்டு (பாம்) வெம்மையற்ற ஓர் இடத்திலே வைக்கப்பெறும். அது ஏவப்பெறின் கூட்டம் கட்டமாகச் செல்லும். சூடுள்ள இடமெல்லாம் சென்று அழிக்கும். அது தண்மை ஊட்டினாலன்றி ஒழியாது. அது வைக்கப்பெறுமிடம் தண்மை உள்ள இடம். அத்தகைய குண்டுகளில் ஒரு நூறு ஏவப்பெறின் உலகம்…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும் – தொடர்ச்சி) 3. வள்ளலாரும் சீர்திருத்தமும் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்] சகோதரிகளே! சகோதரர்களே!! யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாசத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாசம் காலஞ்சென்ற தலைவர் கா. இரா. நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு. கா. இரா. மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை – தொடர்ச்சி) 2. மாணவரும் தமிழும் (15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு) தமிழ்த் தோழர்களே! இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன….