எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்
எங்குமெழுகவே! அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே! – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்
சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி…
என் தாய் – – தமிழ்மகிழ்நன்
அன்பினைக் காட்டி அறிவினைப் புகட்டி அணியெனத் திகழ்பவள் என்தாய்! தென்றலாய் வீசித் தேன்தமிழ் பாடி சிந்தையில் நிறைந்தவள் என்தாய்! மன்றிலில் பெயர்த்தி மாண்புடை பெயரர் மலர்ந்திட மகிழ்பவள் என்தாய்! வென்றிடும் வித்து! விளைநிலம் அவளே விறலவள் தந்தனள் வாழ்க! கனவினும் கடமை கணமதுள் மறவாள் கலங்கரை விளக்கமே என்தாய்! இனம்மொழி நாடு ஈடிலா உயிராய் ஏற்றியே போற்றுவள் என்தாய்! தனக்கென வாழாள் தன்மகார் வாழத் தன்னுயிர்ப் பொருளினைத் தருவாள்! மனமுயிர் மெய்யும் மலரென உருகும் மழலையர் குணமவள் குணமே! சுவைமிகு உணவை நொடியினில் சமைப்பாள்…
காய்கதிர்க் கண்ணகி – – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
காய்கதிர்க் கண்ணகி (அறமே வென்றது) அறிவின் தாயே! அற்புதத் தாயே! எரிதழல் நெஞ்சம் இடும்பை தாங்க மூதின் மகளாய் மொய்ம்பின் உருவாய் ஏதிலி யாயுழல் இற்றைநாள் தமிழரின் அரசியல் உழவில் அன்புநீர் பாய்ச்சி முரசினை அறைந்து முனைமுகம் நின்று உரமுடன் நாளும் ஊக்கம் காட்டி இருபத் துமூன் றாண்டுகள் முயன்று கருவிற் சுமந்த காளையை மறுமுறை ஈன்ற குயிலே! ஈகியின் தாயே! தளரா உழைப்பால் தமிழ்நிலம் சுற்றி களத்தினை வென்ற காய்கதிர்க் கண்ணகி! உந்தன் அழுகையே உரிமை மீட்டது! இந்தியச் சிறையை இடித்தெ…
பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…
என் தாய்
– திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329 தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன் தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்! செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்! உனக்கிலை ஒருவரு மீடே! பற்பல தெய்வம் படைத்தன ரெனினும் பண்புடை தாய்முதற் தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய் நல்லறப் பேற்றினால் பெற்றேன்! வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின் விழைவது அம்மையே…
எல்லாளன் வாழ்க! –
– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329 எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!