ஔவையார் 7 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 16 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 15. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், ‘பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா’ என்னுந் தலைப்பின்கீழ், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனேமண்ணா வதுஞ்சோழ மண்டலமே–பெண்ணாவாளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்செம்பொற் சிலம்பே சிலம்பு.’ என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர்…
தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1. முகவுரையும் முன்னுரையும்
தமிழ்ப்புலவர் சரிதம் முகவுரையும் முன்னுரையும் ஆசிரியர் ஒரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய நீ.வி.கு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்‘ எனப் பெயர் தந்து இந்நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை…