பாரதிதாசனின் தமிழ் உணர்வு
பாரதிதாசனின் தமிழ் உணர்வு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம். தமிழ் மொழியில் ஈடுபாடு தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத்…
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும். சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…
எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்
தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும், தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது ! சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல் உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…
உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்
அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற…
தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்
– தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ – திருப்புகழ் இசைப்பா 1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி! உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி! மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல 2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி! மகிழப் பலகலை உணர்வுதரு மொழி! மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும் 3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி! பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி! பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள் 4. பழைய குறை –…