(தமிழ்நாடும் மொழியும் 42 : தமிழ் மொழியும் வடமொழியும் தொடர்ச்சி)

6. தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்


தமிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துகளைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர், நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துகளின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துகள், வேறு எவற்றின் துணையும் இன்றித் தனியுரிமையோடு இயங்கவல்லன. எனவே அவை உயிர் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அ முதல் ஒளகார இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகளாம். உந்தியிலிருந்து எழுகின்ற காற்றானது வாயின் வழியே யாதொரு தடையுமின்றி வெளிவருகின்ற பொழுது பிறப்பது உயிராகும். உயிர் எழுத்துகளிலே பலவகை உண்டு.

அ, இ, உ, எ, ஒ என்பன குறில்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள என்பன நெடில்கள்.
அ, இ, உ என்பன சுட்டெழுத்துகள்.

உயிர் எழுத்துக்களின் அடிப்படை எழுத்துகள் அ, இ, உ, என்னும் மூன்றாகும். அ வும் இ யும் சேரின் எ பிறக்கும். அகரமும் உகரமும் சேரின் ஒ பிறக்கும். நா கிடந்த நிலையில் வாயைத் திறக்க அகரமும், அந்நிலையில் நா முன்னீக்கி எழுகையில் இகரமும், பின்னோக்கி எழுகையில் உகரமும் பிறக்கும். உயிர் எழுத்துகளிலே ஐ என்பதும் ஒள என்பதும் கூட்டொலிகளாகும்.

உயிர் எழுத்துகள் புகுதற்கு இடமாக உள்ள க் முதலிய பதினெட்டெழுத்துக்களும் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எனின் உடம்பு என்று பொருள். வாயின் வழியே வருங்காற்று உதடு, பல், நா முதலியவற்றினால் தடைப்படுத்தப்பட்டு வெளியிடப்படின் மெய்யெழுத்துக்கள் பிறக்கும். மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் உரிய முயற்சி மட்டும் ஒன்று; பிறக்கும் இடம் மட்டும் வெவ்வேறு. அஃதாவது மூக்கின் வழியாகக் காற்று வருகையில் மெல்லினம் பிறக்கும் என்பதாம். ககார முதல் னகார முடிய உள்ள பதினெட்டும் மெய் எழுத்துகளாம். இவற்றிலே ய, வ, என்ற இரண்டும் அரையுயிர்கள் என்றும் உடம்படு மெய்கள் என்றும் கூறப்படும். க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் என்பனதாம் உண்மையிலேயே மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்பன இறுதியில் வரும் மெய் எழுத்துகள். மொழிக்கு இடையிலே வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருதல் இல்லை.

ஆய்தம் என்பது புள்ளி, தனிநிலை, அஃகேனம் முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இது மொழிக்கு இடையிலேதான் வரும். மிகவும் அருகிய பயிற்சியுடையது ஆய்தம். இந்த ஒர் ஆய்த எழுத்தைக் கொண்டே எத்தகைய பிறமொழிச் சொற்களையும், பிறமொழி எழுத்துக்களைக் கடன் வாங்காமலேயே தமிழிலே எழுதிவிடலாம் என்று நிறுவினர் காலஞ்சென்ற அறிஞர் பா. வே. மாணிக்கனார்.

உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப் பதினாறு ஆகும். மெய்யெழுத்துப் பதினெட்டையும் உயிரெழுத்துப் பன்னிரண்டையும் பெருக்கினால் இருநூற்றுப் பதினாறு என்ற தொகை வரும். உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய் எனப் பெயர்பெற்றது.

அடுத்து, தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவங்களையும் பிற்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் முறையாக ஆராய்வோம்.

‘ஈ’ என்பது, ஈ என்றும் ” ” என்றும் இருவிதமாக எழுதப்படுகிறது. மற்ற நெடில் எழுத்துகளுக்குச் சுழி இருப்பதை நோக்கியே சிலர் இவ்வாறு எழுதுகின்றனர். ஆனால் இலக்கணத்தில் இதுபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் ஈ என்ற வடிவே பண்டுதொட்டு வழங்கிவந்திருக்கலாம். எகரமும் ஒகரமும், அவற்றின் நெடில்களும் தொல்காப்பியர் காலத்தே பின்வருமாறு எழுதப்பட்டு வந்தன.

 எ், ஒ் – குறில்கள்.
எ , ஒ – நெடில்கள்.


பண்டைக்காலத்தே ஒலையிலே புள்ளியிட்டு எழுதும் வழக்கமில்லை. எனவே இவை போன்ற குறில்களையும் நெடில்களையும் ஒரேமாதிரியே எழுதிவந்தனர். இதனால் படிப்பார்க்குக் குறில், நெடில் பற்றி மயக்கமும், படிப்பதில் தயக்கமும் ஏற்பட்டன. இந்தத் தயக்கத்தையும் மயக்கத்தையும் நீக்குவதற்காக வீரமாமுனிவர் இவ்வெழுத்துக்களைக் கீழ்வருமாறு எழுதினர் :

எ, ஒ = குறில்.
ஏ, ஓ = நெடில்.
 

மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகள் யாவும் புள்ளி மேலிடப்பெற்று எழுதப்பட்டன. ஆனால் ஏட்டில் எழுதும்பொழுது புள்ளி நீக்கப்பட்டது. இன்றைய ஏட்டில் புள்ளியிடப்பட்டே மெய்யெழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

இங்கே ககரம் முதல் கெள வரை உள்ள எழுத்துகளும் பதினெட்டு மெய்களுக்கும் இனமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

க (க்) புள்ளி நீக்கி எழுதப்பட்டது.

க + ஆ = க என்று முற்காலத்தே எழுதப்பட்ட வடிவம்.

கா-இஃது இன்றைய வடிவம்.

கி, கீ = மேல்விலங்கு இருந்தது.

கு, கூ = என்று முன்னர் எழுதப்பட்டது. கெ = அன்றும் இன்றும் இவ்வாறே

எழுதப்பட்டுவருகிறது.

கே. = இது, கெ் என்று எழுதப்பட்டது.

கெ் இதனைக் கே என்று வீரமாமுனிவர் ஆக்கினார்.

கொ என்பதன் பண்டைய வடிவம் கெ ஆகும். கோ என்பது கெ். என்று முன்பு எழுதப்பட்டது. கை என்பது ooக என்றெழுதப்பட்டது. கெள என்பது கெoo என்றெழுதப்பட்டது. ரகர மெய்யும், ரகர உயிர் மெய்யும் முற்காலத்தே:”ா” என்ற ஒரு வடிவாலேயே குறிக்கப்பட்டன. பின்னர் இக்குறியீட்டின் தெளிவின்மையை அறிந்த வீரமாமுனிவர் ரகர மெய்யினை ர் என்றும், ரகர உயிர் மெய்யினை ர் என்றும் எழுதினர்.

ஆய்தம்

.. என்பது தொல்காப்பியர் காலத்து ஆய்த வடிவம். ஃ என்பது உரையாசிரியர் காலத்து ஆய்த வடிவம். இன்று இரண்டும் வழக்கில் உள்ளன.

குற்றியலுகரமும் குற்றியலிகரமும்

இவையிரண்டையும் குறிக்க இவற்றின் மீது பண்டு புள்ளியிடப்பட்டது.

கு ச் சு், குழலினிதி் யாழினிது

இன்று இவ்வழக்கம் கைவிடப்பட்டது.

எட்டு என்று இன்று எழுதினுல் பெரும்பாலும் எண்ணையும், அடியையும் குறிக்கும். பழங்காலத்தே,

எட்டு என்பது எண்ணையும், எட்டு என்பது எள்ளென்னும் பொருளையும் குறிக்கும்.

இன்னும் தமிழ் நெடுங்கணக்கில் எத்தனையோ மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுத்தான் வந்துள்ளன.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்