தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்றாலும் இது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவந்த துறைகளில்கூட, இணையப் பயன்பாடு, கணிணிப் பயன்பாடு ஆகிய காரணங்களால் தமிழ் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியும். என்றாலும் தக்க வழிகாட்டியின்றியும், சோம்பல், ஆர்வமின்மை ஆகியவற்றாலும் ஆங்கிலப் பயன்பாடு பெருகி வருகிறது. இச்சூழலில் பதிவுத்துறையின் தமிழ்ப்பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். பதிவுத்துறையில் பிற துறைகளைப்போலவே தமிழ், ஆங்கிலம்…
புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன. கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.