காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்
காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம் தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார். இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…