எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு
அறிவொளி இறைவா போற்றி போற்றி அம்மை யப்பா போற்றி போற்றி எந்தாய்த் தமிழே போற்றி போற்றி எந்தை நாடே போற்றி போற்றி தெய்வப் புலவா போற்றி போற்றி திருத்தகு குருவீர் போற்றி போற்றி திருவெலாந் தருவீர் போற்றி ஓம்! – திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி
உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்
பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண் டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய் வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19
திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!
தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்
கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57
சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க
பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்
அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்
மறைமுதல் கிளந்த வாயன்மதி மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம் – கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து
தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன்
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றே முழங்கிய தமிழே வாழ்க! நாடும் மொழியும் தாயயன எம்மை! வணங்கிடச் சொன்ன தமிழே வாழ்க! அன்பே தெய்வம்! அறமே கோவில்! நன்றே சொல்லிய தமிழே வாழ்க! வீரமும் அறமும் உயிரெனச் சொல்லி! நெறிமுறை வகுத்த தமிழே வாழ்க! வறுமையில் இருந்தும் விருந்திடச் சொன்ன! பண்பிற் சிறந்த தமிழே வாழ்க! தீமைகள் செய்தால் நன்மைகள் செய்தே! திருத்திடச் சொன்ன தமிழே வாழ்க! அரசுக் கட்டிலில் புலவன் துயின்றும்! மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க! ஓளவைக்கு நெல்லிக்கனியினைக் கொடுத்து! மன்னவன்…
தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம். 1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே. 2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம். 3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…