வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? – கார்க்கோடன்

வடக்கை வாழ  வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்?   தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகளைவிட அதிகம் குரல் கொடுத்து வரும், தன்னைத் தமிழ்த்தாயின் தத்துபிள்ளை என்று சொல்லிக் கொண்ட தருண் விசய்,  இந்தியாவின் இன-நல்லிணக்க நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும் தற்காத்துப் பெருமைபடுத்திப் பேசுவதாக நினைத்து, “ நாங்கள் (இந்தியர்கள்) இனவெறியர்கள் அல்லர். எங்களைச் சுற்றியும் கறுப்பு நிறத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இனவாதிகளாக இருந்தால் தென்னிந்தியர்களோடு எப்படிச் சேர்ந்து வாழ்கிறோம்?”  என்று பேசியுள்ளார்..    அவர் பேசிய நோக்கம் எதுவானாலும்,  சொற்கள் தென்னிந்தியர்களை அயன்மைப்படுத்தி(அன்னியப்படுத்தி)க் காயப்படுத்துவதாக…

திருக்குறளை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் உரை

. திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டி ஆளுநர் உரை   உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தமிழார்வலரான நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் முயற்சியின் பேரில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உரூ.200 ஆயிரம் (இரண்டு இலட்சம்) வழங்கி உள்ளார்.   சிலை அமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா தலைநகர் தேராதூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த…

பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அறிவிக்க தருண் விசய் முயற்சி

பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை விடுதலைப் போராட்ட நினைவகமாக அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய்     பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக் கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை அணிவித்தார். “தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார். மேலும்,   பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்….