தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்
(தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.1) நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகுநேர்காணல்: மினர்வா & நந்தன் [நக்குசலைட்டு வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘சமூகநீதி தமிழ்த் தேசம்’…
தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம்
(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் நேற்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு அவர்களின் கீழ்வெண்மணி பற்றிய கட்டுரையை அன்பர் நலங்கிள்ளியின் தமிழாக்கத்தில் பகிர்ந்தேன். ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் திரும்பப் திரும்பப் படித்த போதும் சீர்மை செய்த போதும் இந்தக் கட்டுரையின் அருமையையும் சந்துரு அவர்களின் பெருமையையும் மீண்டும் புதிதாய் உணர்ந்தேன். தாழி அன்பர்கள் எதைப் படித்தாலும் படிக்கா விட்டாலும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4
(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு ஈ – தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! 2/4 அதே நாளில், 44 பேர் இறப்பு தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது (30.11.1970). தீர்ப்பு வழங்கப்பட்ட போது, 23 எதிரிகளும் இருந்தனர். கீழ்வெண்மணியில் கோபாலகிருட்டிண நாயுடுவுக்கும் மற்ற 8 பேருக்கும் 10 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சட்ட விரோதக் கூடல், குற்றச்…
தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 1/4
(தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!-தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை!(கீழ்வெண்மணியில் 52 ஆண்டு முன்பு நடந்தது என்ன?) “நேற்று வரை நாங்கள் கொடுத்ததை வாங்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் இன்று எகிறுவது எப்படி?”வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கும் சாணிப் பால் – சவுக்கடிக்கும் செங்கொடிச் சங்கம் முடிவு கட்டிய பின்னர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஒரு நிலக்கிழாரின் பிதற்றலிலிருந்து எல்லாம் தொடங்கியது. உலகெங்கும் சமூகவியலர்கள் கீழ்வெண்மணிக் கொலைகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்துபுதைகுழியில் உறங்குகிறார்! சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம். இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும்….
தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்
(தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்-தொடர்ச்சி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் திறந்த மடல் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு. என் கனிவான வணக்கத்தையும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினையும் ஏற்க வேண்டுகிறேன். உங்களுக்கிருக்கும் கடுமையான நேர நெருக்கடிக்கிடையே எனக்காகச் சில நிமையம் ஒதுக்கி, இந்தச் சுருக்கமான மடலைப் படிக்க வேண்டுகிறேன். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரிமுத்து-மகாலட்சுமி சாதியாணவக் கொலைக்கு நீதி கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் சென்ற 17/08/2023இல் நடைபெற்ற…
தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5) -தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் போராட்டக் களம் பெரியகுளத்தில் மகாலட்சுமி – மாரிமுத்து ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டு – குறிப்பாக இந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை அட்டவணைச் சாதிகள் அட்டவணைப் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியக் கோரி – ஆகட்டு திங்கள் 5ஆம் நாள் தொடங்கிய போராட்டம் இன்று வரை உறுதியாகத் தொடர்கிறது. இந்த இடைக்காலத்தில் நடந்துள்ள சில நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள…
தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5)
(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும். இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)
(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது. ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத்…
தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?
(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி) பொதுக் குடியியல் சட்டம் இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது. அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது…
தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3) காவிக் கூட்டத்தின் பொதுக் குடியியல் சட்டமும் இசுலாமியப் பெண்ணுரிமையும் பொதுக் குடியியல் சட்டம் பற்றிய தொடர் மடலுக்குச் செல்லுமுன்… ஒருசில செய்திகளைப் பகிர வேண்டும். 1) இந்த உரை யாடலில் சொத்துரிமை , வாரிசுரிமை போன்றவற்றுக்கான சட்டங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பிய போது, தோழர் சமந்தா நக்குவெய்ன் மார்க்குசியப் பள்ளிக்குச் சென்று வந்த பின் அங்கு…
தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…