தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 5 – வைகை அனீசு
5 கடமை ஆற்றுவோர் ஒருபுறம்! கடமை தவறி அலைக்கழிப்போர் மறுபுறம்! பேரூராட்சிச் செயல் அலுவலர்கள் செயல்பாடுகள் நாம் கேட்கக்கூடிய தகவலைத் தருவற்கு மாற்றாக தகவல் தர மறுப்பதற்குச் சில பிரிவுகளை வைத்துள்ளனர். அந்தப்பிரிவில் ஒன்றான “8(1) என்ற பிரிவின் கீழ் தகவல் தர இயலாது” எனக்காரணம் கூறித் தப்பித்துவிடுகின்றனர். பிரிவு8(1)( ஒ) [8(1)(j)] : தனிப்பட்ட ஒருவரைக் குறித்து நாம் கேட்கும் தகவல், பொதுச்செயல்பாடு அல்லது பொது நலனுக்காக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில் உள்ள தகவலாக இருப்பின் அல்லது…
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 4 – வைகை அனீசு
(சூன் 28, 2015 இதழின் தொடர்ச்சி) 4 உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பிரிவு 24: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசால் நிறுவப்பட்ட உளவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது எனப் பிரிவு 24 கூறுகிறது. இதில், 25 வகையான நிறுவனங்கள் அடங்கும். இருந்தபோதிலும், இந்நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தகவல் கேட்டால் அதனைப் பொதுத் தகவல் அலுவலர் மறுக்கக் கூடாது; தொடர்பான…
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்குக!
திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்! நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. …
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2
(தொடர் கட்டுரை) 2 1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் இசுலாமியர்களின் மசூதி மற்றும் நிருவாகத்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது. எந்தக் குறிப்பிட்ட சாதியினரிடமோ, துணைச்சாதியினரிடமோ, சாதிக்கு வெளியே இருந்தவர்களிடமோ ஒப்படைக்கவில்லை; எந்தக் குறிப்பிட்ட பிரிவினரிடமும் ஒப்படைக்கவில்லை. மசூதிகள் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர்கள் தங்கள் இசுலாமியச் சமயச்சட்டத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் ‘வக்பு’ எனப்பட்டது. அதன்பின்னர் வக்பு வாரியமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ‘தமிழ்நாடு வக்பு வாரியம்’ என அமைக்கப்பட்டு அதன் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களைப்…
முதியோர் கொலை – வைகை அனிசு
பெண்குழந்தைக்கொலைபோல் முதியோர் கொலை தொடரும் பேரிடர்! “வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும்…
செய்தியாளர் வீட்டை நொறுக்கியது தொடர்பான முறையீடு
பதிவஞ்சல் – அஞ்சல் அட்டை ஒப்புகையுடன் அனுப்புநர் எசு.சபியுதீன்(செய்தியாளர்) 42 அ., .பட்டகால்தெரு, திட்டச்சேரி-609 703. நாகப்பட்டினம் மாவட்டம் பேசி : 98425-22442 பெறுநர் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை-600 009. பொருள்: என்னையும் என்குடும்பத்தாரையும் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது – தொடர்பாக ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய வருமானத்திற்கு வீட்டில் செடி வளர்ப்புத்…
திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!
திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்! நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…
திட்டச்சேரியில் தில்லு முல்லு தேர்தல் – கமுக்க முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுப்பு
பள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள்! பொதுச்சொத்து கொள்ளை! நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத்…
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை! ஆண்டுதோறும் தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை, தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம் இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு. பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன….
செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!
திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன். இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள், 18 அகவைக்கும்…
திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி
திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் இந்தியன் ஓவர்சீசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் பல கோடி மதிப்பில் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத்து, அமெரிக்கா, ஆங்காங் போன்ற நாடுகளில் வணிகத்திற்காகவும் பணிக்காகவும் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வங்கியை நாடித் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்தல், காசோலை மாற்றுதல், வரைவோலை எடுத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் ஓவர்சீசு வங்கியில் அவ்வப்பொழுது கணிணி…
நூலகம் இல்லாத திட்டச்சேரிப் பேரூராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர். ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் எனவும் அதற்காக வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் காண்பித்தும் இதுநாள் வரை நூலகம் கட்டப் பேரூராட்சி முன்வரவில்லை. திட்டச்சேரிப் பேரூராட்சியில் உள்ள ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள்,…