போடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்டம்.

போடுமலையில் அரிய உருளை வடிவ கல்வட்டங்கள் கண்டெடுப்பு! எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர் தகவல்   கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போடுமலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிய வகை உருளை வடிவக் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடிவத்தில் எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருக்கும் இந்த உருளை வடிவக் கல்வட்டங்களை, பண்டைய தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் த. பார்த்திபன். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலையின் தொடர்ச்சியாக உள்ள…

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக்…

இலக்கிய யானைகள் எட்டு! – பு.சீ. கிருட்டிணமூர்த்தி

ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்    நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய(முதலியார்) என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர் கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச் சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு…

இலக்கணச் செம்மல் இலக்குவனார் – இடைமருதூர் கி.மஞ்சுளா

இலக்கணச் செம்மல் இலக்குவனார் தினமணி 17.05.09   “இன்று யார் யாரோ புரட்சி என்ற அடைமொழியுடன் வருகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஒரு தமிழ்ப் புரட்சியை நடத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் ஆங்கிலத்தில் பேசமுற்பட்டபோது 150 பேராசிரியருள் தைரியமாக எழுந்து நின்று “என்னருமைத் தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதைக் கல்லூரி முதல்வர் அறிவாரா?’ என்று கேட்டு புரட்சி செய்த பெருந்தகை முனைவர் இலக்குவனார்” என்று போற்றுகிறார் கி.வேங்கடசுப்பிரமணியம்.  “எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்ப் பரப்ப” என்பது…

தமிழும் சிங்களமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    தமிழும் சிங்களமும்   “உலக மொழிகளின் தாய், தமிழே” என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், “இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே” என்கிறார். “எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை” என்கிறார் முனைவர் சுப்பிரமணிய(ஐய)ர். “தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி” என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும்…

தமிழுக்கு அமுது தந்தவர்! – முனைவர் ம. இராசேந்திரன்

 சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்? ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார்…

அயல் எழுத்து அகற்று! – இலக்குவனார் திருவள்ளுவன்,

  ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது….

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்

     மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…

தமிழ் இலக்கியத் திருவிழா

“தினமணி’ நாளிதழும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்த இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழா வரும் சூன் 21, 22 ஆம் நாள்களில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்வை இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ.ப.செ. அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். ஔவை நடராசன் தலைமையில் “இன்றைய தேவையும் இலக்கியமும்’, ஞான. இராசசேகரன் தலைமையில் “காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்’, மாலன் தலைமையில் “தகவல் ஊடகத்தில் தமிழ்’, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில்…

(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!

முதன் முதலாக  உலகத் திருக்குறள்  மாநாடு!    இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…

உங்களைப் போன்றவனின் உள்ளக்குமுறல் – ஈழப்பதிவுகள் : 1-5

 – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்!  பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்!  5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின்  மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற…

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும்  தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி  பின்வருமாறு பேசினார்: பழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம்…