பெரியார் யார்? – கவிவேந்தர் கா.வேழவேந்தன்
பெரியார் யார்? மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால், வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும் பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்! பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால் தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது? விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும் விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா? சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும் குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல் கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு வகைவகையாய் உடைநெய்து எழிலைச் சேர்க்கும் வண்மைமிகு நெசவாளி இல்லா விட்டால்,…
தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்
தமிழரின் பெருமை குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்
தமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்
தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ‘ தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்கநாட்டுப் பெரியவர்களைப்…
தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்
தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர் நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக விட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம்….
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம். இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…