திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகம் இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து பங்கேற்க உள்ளனர்.
கருஞ்சட்டை விருது வழங்கும் விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022மாலை 6.00சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை கருஞ்சட்டை விருது பெறுநர் : திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு :அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி
திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா, கோவை
மார்கழி 18, 2052 / 02.01.2022 ஞாயிறு காலை 9.30 திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா மாநகராட்சி கலையரங்கம்,இர.ச.புரம்(ஆர்.எசு.புரம்), கோயம்புத்தூர் தலைமை : பொள்ளாச்சி மா.உமாபதி முன்னிலை : கோவை மாவட்டத் திமுகச் செயலாளர்கள் சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை நா.கார்த்திக்கு, பையா ஆர்.கிருட்டிணன், மருதமலை சேனாதிபதி, மருத்துவர் கி.வரதராசன் வாழ்த்துரை : அமைச்சர் வி.செந்தில் பாலாசி, மேனாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி, திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் இரா.வெண்மணி, திராவிடன் அறக்கட்டளைத் தலைவர் கோவை பாபு நோக்க…
ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? – தோழர் சுப.வீரபாண்டியன்
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? -கருத்தரங்கம்
‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்….
‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வு – பேரா.சுப.வீ.
அன்புடையீர், வணக்கம். எங்கள் பேரவையின் சார்பில், வரும் வைகாசி 05, 2050 ஞாயிற்றுக் கிழமை (19.05.2019) மாலை 6.30 மணிக்குச், சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்சு சாலை, இந்திய அலுவலர் சங்கம் (Indian Officers’Association)கலையரங்கில், பேரறிஞர் அண்ணா பற்றிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்னும் நூல் திறனாய்வு அரங்கம் நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நூலைத் திறனாய்வு செய்கின்றார். அன்புடன், துரை.செ.கண்ணன் ஊடகத்துறைப் பொறுப்பாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை
திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
மாசி 25, 2050 சனி 09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை
மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120, என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24) திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம் வரவேற்புரை: தோழர் சாந்தசீலன் தலைமை: தோழர் மு.மாறன் சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்) – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும் கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார், தோழர் மகாலட்சுமி –…
எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை
பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தித் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் கருத்தரங்கம் நாள் : புரட்டாசி 02, 2049 – 18 – 09- 2018 கருத்துரை: தோழர் சுப.வீரபாண்டியன் வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன் தோழர் ஆளூர் சாநவாசு இடம்: தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம், புதுக் குளம் சாலை, நுஙகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில், சென்னை -34
“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்
வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்). “கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம் சிறப்புரை : இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன், திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்
கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர் சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம் முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான் வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள. மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…