உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2.

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44 தொடர்ச்சிதிருவாவடுதுறைக் காட்சிகள் 2 அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள (இ)ரிசபம் மிகப் பெரியது. “படர்ந்தஅரசு வளர்ந்த (இ)ரிசபம்” என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிருவாகத்துக்கு உட்பட்டது.இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும்சிறப்புடையதாக விளங்குகிறது. உற்சவச் சிறப்புகுரு பூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் இரதோத்சவம்நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். இரதசப்தமியன்று தீர்த்தம். பெரும்பாலும் இரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்றுஅடுத்தே வரும்; சில வருடங்களில்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44திருவாவடுதுறைக் காட்சிகள் மார்கழி மாதக் கடைசியில் எனக்கு சுர நோய் முற்றும் நீங்கிற்று;ஆயினும் சிறிது பலக் குறைவுமட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம்போக வேண்டுமென்ற விருப்பம் வர வர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில், சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப் பாடம் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர்திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளைவாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என்சந்தேகத்தை அறிந்த என்…