கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 / செட்டம்பர் 25) தேனியில் நடைபெற்றது;…
பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு
பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு தேனி மாவட்டம் கம்பத்தில் 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து விருதும், பொற்கிழியும் வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் சூலை மாதம் வரை வெளிவந்த கவிதை நூல்களில் ஓசூரைச் சேர்ந்த பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய ‘செப்பேடு’ மரபுக் கவிதை நூலை இவ்வாண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்தது. ஆடி 31, 2047 / 15 -08 – 2016 திங்களன்று. …
புதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா
மாசி 23, 2047 / மார்ச்சு 06, 2016 மாலை 5.30 சிறப்புரை : இரா.இளங்குமரனார்
சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்
சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள் தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…
தேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்
தேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு,…
காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 2
2 மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உழவிற்கு அடுத்தபடியாக விளங்குவது கால்நடை வளர்ப்புத்தொழில்தான். இந்த இரு மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளமையால் கால்நடை வளர்ப்பதைப் பரம்பரைத் தொழிலாக வைத்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து நின்றுவிட்டதாலும் அணைகள், அருவிகள் அனைத்தும் நிரம்பி விட்டதாலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண் பூமிகளில் நெல், கரும்பு, தக்காளி, வாழை முதலான பயிர்த்தொழிலும், மானாவாரிப் பகுதிகளில் விதைகள் விதைப்புப் பணி தொடங்குகிறது. எனவே ஆடு, மாடுகளை மேய்க்கக் காட்டுப்பகுதிகளைத்தான் நாடிச்செல்லவேண்டியுள்ளது. இவற்றைத்தவிர வனப்பகுதி,…
தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்
தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர். மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…
ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!
தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது. தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…
என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு
ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள் “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….
திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்
திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…
திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்
திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர். செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…
தேனிமாவட்டத்தில் தேசியக்கொடியை ஏற்றியவுடனேயே கீழே இறக்கிய ஊழியர்கள்
தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் கொடியைச் சரிசெய்து மீண்டும் ஏற்றினார்கள். உயிரினும் மேலான தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பலவித நிபந்தனைகளும், பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன்…