விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு

தமிழர் திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள்   மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, நாம் திரும்பப் பெற்றோம். குர்க்குமா அரொமெட்டிக்கா என்ற அறிவியல் பெயர் கொண்ட கத்தூரி மஞ்சள் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுகிறது. இதனுடைய கிழங்கு, மருத்துவப் பயன்மிக்கது….

அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்துக! – வைகை அனிசு

    அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்  தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும் விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும் தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. இச்செடியின் வேர்,…

தேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை

தேனிமாவட்டத்தில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை   தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப்…

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.   மேலும் இப்பகுதியில் விளையும்,…

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ

தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…

மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு

மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு   தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும்…

இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்

தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…

தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்

தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்   தேனிமாவட்டத்தில்   ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது.   தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…

இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு

இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்! அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்)   தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.   தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.   தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…

தேனியில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்

தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்! சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!   தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை.   மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…

கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!

கந்துவட்டியாளர்களுக்கு  அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு   தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.   அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…

செயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்

dp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில்     தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன.  இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…