இனிதே இலக்கியம் – 9 தமிழன்னையைப் போற்றுவோம்!: க.சோமசுந்தரப்புலவர்
9 தமிழன்னையைப் போற்றுவோம்! செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச் சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச் சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே! தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல். “தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர்…