தமிழ் வளர்த்த நகரங்கள் 11. – அ. க. நவநீத கிருட்டிணன்:குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்- தொடர்ச்சி) குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ், நான்காம் தமிழ்ச்சங்கம் திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது,“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”என்ற திருக்குறளை நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச்…