உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி) யான் பெற்ற நல்லுரை 39 மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து. தியாகராச செட்டியார் தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1 -தொடர்ச்சி) 38. நான் கொடுத்த வரம்…. தொடர்ச்சி “ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியத்தர் சொன்னார். “என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன். “சருக்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரசம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்;…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு -தொடர்ச்சி) 38. நான் கொடுத்த வரம் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறுமுகத்தா பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில் தங்கினோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாட் காலையில் பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார். சிவக்கொழுந்து தேசிகர் பெருமை பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் சாகை சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர்…