நான்!  –  அகரம் அமுதன்

நான்!    துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்!   கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன்  – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்!   வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்!   பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்!   அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html

பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

நான்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம்  என்றால் ஒற்றுமையின் சின்னம்…