குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று எழுதுக! – கவிஞர் முருகேசு
குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் முருகேசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்கு இராமலிங்கம்& குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். தேசூர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி கிளை நூலகர் கு.இரா.பழனி,…