திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்- ஆய்வுரை 2. : இலக்குவனார் திருவள்ளுவன்
2 இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார். நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார். 1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள் 2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள் 3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள். 4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள். இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார். கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம்,…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…