தேவதானப்பட்டிப் பகுதியில் நீரின்றி வாடும் நெற்பயிர்கள்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அறுவடைநேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, இரெங்கநாதபுரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் அறுவடை நேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகிவருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதிக்குச் செல்கின்ற 13ஆவது மடையிலிருந்து 18 வரை மஞ்சளாறு அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்லவில்லை. இதற்குக் காரணம் இப்பகுதியில் புறவழிச்சாலை பணிநடந்து கொண்டிருந்தது. அப்போது புறவழிச்சாலைக்கு பணிநடப்பதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் மண், மணல், கற்கள் அடைத்துத் தண்ணீர் செல்லாமல் நின்றுவிட்டது.  …

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….