60brownplanthopperinfection 60pukaiyan-noay

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

  தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.

  தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன.

 இதனால் நெற்பயிரில் பூச்சிநோய் தாக்கும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நெற்பயிரில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் சென்றால் அங்கு அதிகாரிகள் இருப்பதில்லை.

தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் வேளாண்மைத்துறை அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதன் தொடர்பாகப் பெரியகுளம், வடுகப்பட்டி; அலுவலகத்தில் சென்று தங்கள் குறைகளை முறையிடலாம் எனச் சென்றால் “அதிகாரிகள் முகாம் சென்றுள்ளார்கள்” என்ற மறுமொழியே வருகிறது. இதனால்உழவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

 

நெற்பயிர்களை நோய்களிலிருந்து காத்து உழவர்பெருமக்களை அரசு காப்பாற்றுமா?

60vaigai-aneesu