திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 087. பகை மாட்சி படைஅறிவு, வலிமை, நல்துணை பொறுமை போன்றன பகைச்சிறப்புகள். வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை. வலியார் பகையை, விலக்குக; மெலியார் பகையை, விரும்புக. அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான், என்பரியும் ஏ(து)இலான் துப்பு….? அன்பு,துணை, வலிமை இல்லான், பகைவரை எப்படி எதிர்கொள்வான்….? அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான், தஞ்சம்…