ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்
(முன் பகுதியின் தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல் 101. காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181) 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182) 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183) 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184) 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185) 106. விளக்கில்லையேல் வருகிறது இருள்….