(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை  தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால்   13.குடி இயல்    அதிகாரம் 100. பண்பு உடைமை  உலகத்தார்  இயல்புகளை   நன்குஅறிந்து   நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல்   எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும்,      பண்(பு)உடைமை என்னும் வழக்கு.         பண்புஉடைமை என்னும் வழக்கம்,         எளிமையாய்ப் பழகுவதால் வரும்.   அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும்,      பண்(பு)உடைமை என்னும் வழக்கு.         பண்பாளரின் இரண்டு சிறப்புகள்:         அன்பும்,…