உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!        – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 1/2 ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த…

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை  : இப்போதும்… ஈரவாடை…..                  பதினெட்டு வருடங்களுக்குப் பின்பு, ‘உயிர்ச்சுழி’  இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பினைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பில் தேவைக்கு ஏற்பச் சில படிகள் மறுஅச்சு செய்து வெளியிடப்பட்டாலும் முறையான இரண்டாம் பதிப்பாக இதைக் கொள்ளலாம்! ஆம்! பதினெட்டு வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளிதான்!                 இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை மீண்டும் வாசிக்கின்ற போது, ஒரு பழைய ஒளிப் படத்தினைக் காண்பது போன்ற பரவசமும், அது உண்டாக்கும் ஏக்கமும் தான்…

‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை

 ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ பதிப்புரை     தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை  & நன்றியுரை   பதிப்புரை(2002)      தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும்  உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!   சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் …

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்   அ.  முகவுரை, பதிப்புரை முகவுரை   இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.   தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய…

சங்க நூல்கள் வரலாற்று நூல்களே!

  சங்க நூற்களில் பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளை உள்ளவாறுணரலாம். நிலவியல்பால் பல நலங்குகளைக் காணலாம். சிற்றுயிர் வாழ்க்கைகளை உற்று நோக்குவதால் மாந்தர் கற்றுக் குற்ற நீங்கிக் குணங்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டிய பல வாய்மைகளை உணரலாம். குறிப்பிற் புலப்படுத்தும் அறமுறைகள் அளவில்லன அறியலாம். இவற்றிற்கு உள்ளுறையுவமம் எனப் பெயர்ந்து உள்ளுதோறுள்ள முவக்குமாறு உள்ளியுணர வைத்தனர் ஆன்றோர். இவ்வுள்ளுறையினைக் கொண்டு கள்ளங் கபடொழிந்து வெள்ளையுள்ளத்தராய் வள்ளன்மையோடு வாழலாம். மேலும் பண்டைமாந்தர், புலவர், புரவலர், குறுநிலமன்னர், முடியுடை வேந்தர், ஆண்மை, அடக்கம், ஆள்வினையுடைமை, உழவு, வணிகம், அறமுறை…