தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது தேனிமாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் வன்கவர்வினால்(ஆக்கிரமிப்பினால்) ஓடையாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம் பகுதியில் பன்றியாறு(வராகநதி) ஓடுகிறது. இந்தஆறு மேற்குமலைத்தொடர்ச்சியில் உற்பத்தி ஆகிப் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம் வழியாக குள்ளப்புரம் வரை செல்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான தென்னந்தோப்புகளும் வயல்களும் உள்ளன. மேலும் மேல்மங்கலம். செயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் ஊராட்சிகள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இந்த ஆற்றில் தொட்டி கட்டி அதன் மூலம் நீரை எடுத்துத் தூய்மை செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக பன்றியாற்றின்(வராகநதியின்) இருபுறமும் தோப்புகளும்…

வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு பின் வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி     தேனி அருகே உள்ள மேல்மங்கலம், செயமங்கலம் பகுதியில் கூவமாக மாறிய ஆறு தற்பொழுது தண்ணீருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தோடுகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து வரும் இந்த ஆறு வராகநதி, கேழல் ஆறு, ஏனம் ஆறு, பன்றியாறு என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது. மேற்குமலைத்தொடர்ச்சியில் ஏறத்தாழ 28 அயிரைக்கல்(கி.மீ) தொலவு வரை பாய்ந்து வைகை அணை அருகே உள்ள குள்ளப்புரம் வரை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கவும், ஓடிவிளையாடும்…