50varaka_aaru

பல ஆண்டுகளுக்கு பின் வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

 

 

தேனி அருகே உள்ள மேல்மங்கலம், செயமங்கலம் பகுதியில் கூவமாக மாறிய ஆறு தற்பொழுது தண்ணீருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தோடுகிறது.

கொடைக்கானல் மலையில் இருந்து வரும் இந்த ஆறு வராகநதி, கேழல் ஆறு, ஏனம் ஆறு, பன்றியாறு என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது.

மேற்குமலைத்தொடர்ச்சியில் ஏறத்தாழ 28 அயிரைக்கல்(கி.மீ) தொலவு வரை பாய்ந்து வைகை அணை அருகே உள்ள குள்ளப்புரம் வரை செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கவும், ஓடிவிளையாடும் திடலாகவும் மணல்பரப்பில் குளித்துத் துவைத்தும் வந்தனர்.இந்த வராக நதியின் மூலம் ஏறத்தாழ 322.56 சதுர அயிரைக்கல் வரை பாசனவசதி கிடைத்தது. கடந்த சில வருடங்களாக மழை பொழியாததாலும் மணல் அள்ளும்  ஒழுங்கமைவுக்குற்றக் (மாஃபியா) கும்பல் வடுகபட்டியில் உள்ள வெள்ளைப்பூண்டுக் கழிவு, ஆடு, மாட்டிறைச்சி, கோழிக் கழிவுகளால் தூய ஆறு கூவமாக மாறியது.

இருப்பினும் வற்றாத நதியாக ஓடியது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் ஆற்றின் கரை இருபுறங்களிலும் வெள்ளமாக ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

இதனால் ஆற்றில் மிதந்து வரும் பொருட்கள், மரம், பாத்திரங்கள் என ஆற்றில் இழுத்துவரப்படும் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல ஒரு கும்பல் ஆற்றின்கரையில் இருபுறங்களிலும் உட்கார்ந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆற்றில் தண்ணீர் ஓடியதால் இப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

 vaigaianeesu_name03