அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்
அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு. இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும். பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார…
இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும். கலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார். அவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய…
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே! சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018…
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல் கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்! உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம் நாளுக்குள்…
நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.
இராசீவு கொலை: அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம். உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு 21.05.1991 இல் நடைபெற்ற இராசீவு கொலையில் உண்மைக் குற்றவாளிகளைவிட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டித்துள்ளனர். இவர்கள் விடுதலைக்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் மத்திய அரசுகளின் சதியால் பயனற்றுப் போயிற்று. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர். இதில் முடிவெடுக்கக் காலத்தாழ்ச்சி ஆனதை முன்னிட்டு இவர்கள் தண்டனையை வாணாள் தண்டனையாக மாற்றி 2014இல் உச்ச நீதிமன்றம்…
ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று! தொண்டர்களை அரவணைத்துச் செல்வதிலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதிலும் வல்லவர் அழகிரி. எனினும் ஒரு பகுதியில் பெறும் சிறப்பைவிட மாநில அளவில் பெறும் சிறப்பு வலிமையானது. எனவேதான், தென்மண்டலப் பொறுப்பாளரான இவரை விட மாநிலப் பொறுப்புகளில் உள்ள தாலின் வலிமையாளராக உள்ளார். தலைவரை இழந்த திமுகவில் யார் பெரியவர் என்னும் போட்டியில் இறங்குவது கட்சி ஒற்றுமைக்கும் குடும்பஒற்றுமைக்கும் நல்லதல்ல. அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் வரலாம். என்றாலும் அவரது அதிரடியான அறிவிப்புகள் ஊடகத்திற்குத் தீனியாக அமையுமே தவிர, அவரது…
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! நாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சி அடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது. “நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா) தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில்…
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….
ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர். தில்லி ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு! முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு! வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும். இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries) என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி,…
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான். அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின்…
அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை! சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற…