தழல் ஈகையாளி தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் தண்டனையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆவணி 11, 2042 / 28.08.2011 அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கியக்கின செங்கொடி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை தியாகராயர் நகரில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 அன்று மாலை 4 மணிக்கு
‘மீண்டும் வருவோம்’ – குறும்படம் திரையிடல்
தாயக-தமிழகக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தமிழீழ மண்ணில் இக்காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மீண்டும் வருவோம்’ குறும்படம் சென்னையில் சிறப்பாக வெளியிடப்பட்டுத் திரையிடப் பட்டுள்ளது. பாசறைப் பட்டறை வழங்கிய ‘மீண்டும் வருவோம்’ என்ற இக் குறும்படம் மாசி 24, 2046 / 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் நாளன்று மாலை 6 மணிக்கு வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் வெளியிடப் பட்டது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டு வைக்க…