பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…