தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும்
(தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!- தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும் இசுரேல் – பாலத்தீனப் போர் குறித்துப் பல கோணங்களிலும் ஆய்ந்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது. எனது அறிவன் கிழமை (தமிழ்நாடு இனி) அரசியல் வகுப்புகளில் இந்தச் சிக்கலின் வரலாறு முழுவதையும் சுருக்கமாகச் சொல்லி வருகிறேன். செமித்திய எதிர்ப்புக் கொள்கை-நடைமுறை, சீயோனியத்தின் தொடக்கமும் வரலாறும், இசுரேல் வந்த வழி ஆகியவற்றை அலசியுள்ளேன். அடுத்து பாலத்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துக் கொள்வோம். இதற்கிடையில், சமூக-அரசியல் கண்ணோட்டமும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!
(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!) ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: “இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.” 1948ஆம்…
தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு
(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாய்மண்ணை விட்டகலோம்!பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி! காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை. இசுரேலின் படையெடுப்புக்கு…
தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் – தஞ்சை மாநாடு நேற்று 10.10.2023 தஞ்சையில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் நடத்திய இன உரிமை எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தமிழ்நாட்டு, இந்திய நாட்டு, பன்னாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பதால் அவற்றை ஈண்டு பகிர்கிறேன். –:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: இன உரிமை இலட்சிய மாநாடுதஞ்சை, 2023 அட்டோபர் 10தீர்மானங்கள் இசுரேலின் இனவழிப்புப் போரை…