பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 2
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 2 உதாரன் இருப்பிடம், உதாரன் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவாறிருக்க, அமைச்சர், பரிவாரத்துடனும், பரிசுப் பொருட்களுடனும் வந்து வணங்குகிறார் கலித்துறை அமைச்சர்: வானும் மண்ணும் வாழுங் காலம் தமிழ்வாழ தேனும் பாலும் கலந்து பாடும் கவிமன்னா தானை கொண்டு தரணி யாளும் தமிழ்வேந்தன் ஏனை இவற்றோடு இனிதே சொன்னான் தன்வணக்கம் உதாரன்: நாடு…
பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1
(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி – களம் : 1 காட்சி : 1 களம் : 1 காட்சி : 1 அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார் அகவல் அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம் கடிதில் அழைத்த காரணம் யாதோ? அரசன் : வருக அமைச்சரே அமர்க ஈங்கே * அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆர்ந்த ஒழுக்கநூல் நீதிநூல்…
‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை
(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் முதல் தொகுதியை நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான். 1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன் பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….
மன்னர் மன்னன்: ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!
(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்! பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல் பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர்…
‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது
(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார். …
புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து
புதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல் அணிந்துரை இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’. அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின் புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர். பக்கந்தோறும் பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர்…
கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்! – மணிமேகலை குப்புசாமி
சொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்
தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை சொற்பொழிவு – 47 ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார் பங்குனி 29, 2050 வெள்ளிக்கிழமை 12.04.2019 மாலை 4.30 தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் அன்புடன்,இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்சென்னை – 600 025.தொ.பே: 2220 9400 மின் முகவரி: tva@tn.gov.in அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை…
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு: பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார். “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால்…