தேர்தல் முடிவுகளின் தாக்கம்! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் தாக்கம் இலக்குவனார் திருவள்ளுவன் உடன் விசவனூர் வே. தளபதி உரையாடல்
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை. பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது….
தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மொழிக்கொள்கை – தொடர்ச்சி) பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்? அமைப்புகள் என்பதே கருத்துகளின் வெளிப்பாடுதான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன? என்பதுதான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, ‘தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, வேறொன்றோ எதை…
சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: உதயநிதிக்கு நன்றி! உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி…
புதிய அரசு செய்ய வேண்டியன!- இலக்குவனார் திருவள்ளுவன்
போலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்
பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – கி. வேங்கடராமன்
ஓகக் கல்வி(யோகா) என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’யின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில அயிரைப்பேரடி(கிலோ மீட்டர்கள்) தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி…
கருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]
கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] கருத்துக் கதிர்கள் 16-18 [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] 16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019)…
அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை…
கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]
கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை. தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…
மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின். அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள். தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி. முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப்…
பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்
பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ச.க வாக்கு எண்ணிக்கையின் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் அதற்குச் சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட நாடகம் என இதனைப் பொதுமக்களே கூறுகின்றனர். வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நாம் பின்வருவனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வப்பொழுது எத்தனை பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் இல்லை. இதுவரை ஒருவர்கூட…