மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை
அருவினைகள் படைக்கும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு மாகாணக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை மலையகத்தில் காணப்படும் தேசியக் கல்லூரிகளில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளினால் மலையத்திற்கான தேசியக் கல்வியற் கல்லூரிகளின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைய வேண்டிய நிலை யாவரும் அறிந்ததே! இதற்குக் காரணம் கல்லூரியின் முதன்மை குறித்து அக்கரை இன்றிச் செயலாட்சியர் செயற்பட்டமையாகும் என்று அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்போது இந்தக் கல்வியற் கல்லூரியின் செயற்பாடுகள் ஒரளவு மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்றும் சில மாதங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு …
பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – கல்வியமைச்சர் வேலுசாமி
பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக 100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இலங்கையில் எதிர்காலத்தில் ஆதாய நோக்கத்துடன் தொடங்கப்படும் வணிக நிலையங்களைப்போலப் பன்னாட்டுப் பாடசாலைகளைத் தொடங்க முடியாது. பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சுப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மாகாணக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார். பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் சிறப்புக் கூட்டம் ஆக.11.2016 மாணாகக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் மாணாகக்கல்வி…
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’! தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேசியத் தமிழ் மொழி நாள் விழா…
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி
மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி! ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன. முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக்…
அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா
ஆடிப் பூரத் திருவிழா ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர் பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
ஈழத்தில் வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தினால். திருவள்ளுவர் சிலைகள் 16 வழங்கப்பெற்றன!
திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில் ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன. தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம் முதலான பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன் ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன்…
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்
மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன் இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு சென்னையில் ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார். இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…
மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா
மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன முதலானவர்கள் கலந்துகொண்டனர்.
மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்
மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம். நுவரெலியா சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது. இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர் சுழற்கழகத்தின் செயலாளர் செயகாந்தன், நுவரெலியா சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை – மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தற்பொழுது 440 ஆசிரியப் பயிலுநர்கள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியப் பயிலுநர்கள் தங்குவதற்கான விடுதிகள், கற்றல் சூழல் முதுலியன பெரும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. இதனைக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்காகவும் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் இதனைப் பார்வையிட்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்வி…
யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா
யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா ஆனி 20, 2047 / சூலை 04, 2016 அன்று முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணைஅதிபர் த.நிமலன், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் சி.ரகுபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் விசாகனன், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் (இ)யோகேசுவரன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை
மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில் வருகை புரிந்தார். அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]